பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கம் இருப்பதாக தான் கருதவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே “திவி நெகும” எனும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பிரதேச சபையின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார்.
எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவருக்கு சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் காணவில்லை என்றார்.