வெல்லவாய- தனமல்வில பிரதான வீதியில் தெலுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 49 வயதான காவல்துறை சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வெல்லவாய காவல்நிலையத்தில் பணிபுரிவதற்காக நேற்று (15) இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினால் அவரின் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஹதபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்றுடன் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணை குடாஓய காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.