கிளிநொச்சி – உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்ற குழுவினர் சென்று நேரடியாக தமது ஆதரவினை வழங்கினர்.
அத்தோடு, தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தை நிறுத்த வேண்டும், தமிழர் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சென்றுள்ளனர்.
இவ்வாறான அடாவடி நடவடிக்கைகள் தொடர்ந்தால் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தெரிவித்துள்ளார்.