பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர், தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக வலியில் அவதியுற்று வருகிறார்.
ஸ்காட்லாந்தில் வாழும் Leigh King (41), இரண்டு வாரங்களுக்கு முன் ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவரது முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் என ஒரு இடம் விடாமல் தோல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் உருவாகின.
தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்களாகியும், இன்னமும் வலியால் துடித்துவருகிறார் அவர்.
.
Leighயின் மகன் ஆட்டிஸக் குறைபாடு கொண்டவன் என்பதால்தான் Leighக்கு தடுப்பூசியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால், யாரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேனோ அவனையே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் Leigh.
Leighஇன் மகனான Aidan (13), அம்மாவின் தோற்றத்தைப் பார்த்து பயந்துபோய் அவருக்கு அருகிலேயே வரமாட்டேன்கிறானாம். இப்போது அவனை கவனித்துக்கொள்ள வேறு ஆள் ஏற்பாடு செய்திருக்கிறாராம் Leigh.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100இல் ஒருவருக்கு இப்படி தோலில் பிரச்சினைகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் பிரச்சினையிலிருந்து விடுபட மருத்துவமனைகள் பல ஏறியும் பலனில்லை என்பதால் தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க இருக்கிறார் Leigh.