பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டியின் மகளான லாலாவை தூக்கி வைத்திருக்கும் அஸ்வினின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.
பிக்பாஸையே ஜாலியாக மாற்றினார் என்றால் அது சாண்டி குரூப் தான், அந்தளவுக்கு அந்த சீசனில் சாண்டியால் ஒரே கலாட்டா தான்.
கடந்த 2017ம் ஆண்டு சில்வியா என்ற பெண்ணை திருமணம் செய்த சாண்டிக்கு, லாலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
பிக்பாஸ் சீசனில் அதிக பிரபலமான லாலா, தற்போது பெரிய ஆளாக வளர்ந்து விட்டார், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன லாலாவை, குக் வித் கோமாளி அஸ்வின் கொஞ்சும் புகைப்படம் வைரலாகி வருகிறது.