என்னிடம் 2006ஆம் ஆண்டு முதல் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆயுதமொன்றை வைத்திருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவ்வறிக்கையில்,
இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை 2006 இல் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை நான் நிறுவனமொன்றின் இயக்குநராக ஜனாதிபதியா பதவிவகித்த மஹிந்த ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டேன் இதனை தொடர்ந்து எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது இது கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.