தனக்கு எந்த கிரிக்கெட் வீரரையும் தெரியாது என நடிகை ஊர்வசி ராவ்டெலா அதிரடியாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்.
2021 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் தலைவராக இவர் களமிறங்குகிறார்.
இவரும், பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டெலாவும் நட்பாக இருப்பதாக 2018ல் செய்திகள் வெளியாகின.
இந்த நட்பை தொடர விரும்பாத ரிஷாப், ‘வாட்ஸ் ஆப்பில்’ இருந்து ஊர்வசியை ‘பிளாக்’ செய்தார். பின் தொழிலதிபர் இஷா நேகியுடன் நட்பாக உள்ளார்.
இதனிடையே கிரிக்கெட் தொடர்பான கேள்விகளுக்கு சமூகவலைதளத்தில் ஊர்வசி அளித்த பதிலில்,பொதுவாக எந்த விளையாட்டு போட்டிகளையும் பார்க்க மாட்டேன்.
இதனால் எந்த கிரிக்கெட் வீரரையும் தெரியாது. ஜாம்பவான் சச்சின், விராட் கோஹ்லி மீது மரியாதை வைத்துள்ளேன் என ரஷாப் பண்ட் மீதான பிரிவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.