தன்னுடைய குடும்பத்தினருடன் சிவகார்த்திகேயன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிப்பு மட்டுமின்றி, காமெடி, தொகுப்பாளர், நடனம், சினிமா தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நடிப்பால் கட்டிப்போடும் திறமை படைத்தவர், இப்படி இவரை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் தன்னுடைய சொந்த மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தில் கூட தனது தந்தையுடன் சேர்ந்து ஆராதனா “வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலும் ஹிட் அடித்தது.
மிக சிறிய வயதில் பார்த்த குழந்தை ஆராதனா தற்பொழுது பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார்.
ஆளே அடையாளம் தெரியவில்லையே, என ரசிகர்கள் வாய்பிளந்து வருகின்றனர்.