பிரான்சில் ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக இயங்கும் உணவகங்களில் அமைச்சர்கள் உணவருந்தியாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அரசாங்க விதிகளை மீறி ரகசியமாக இயங்கும் ஹோட்டல்களில் சொகுசு இரவு விருந்துகளில் நடப்பதை M6 என்ற தனியார் தெலைக்காட்சி வீடியோ ஆதரத்துடன் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த 3வது பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்து ஆவணப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலைக்காட்சியை சேர்ந்த நிருபர் வாடிக்கையாளர் போல் ரகசியமாக இயங்கும் ஹோட்டலுக்குள் சென்று அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அங்கு உணவருந்த வரும் விருந்தினர்களிடமும் பணியாளர் முகக் கவசங்களை அகற்றுமாறு கூறுவது வீடியோவில் சிக்கியுள்ளது.
குறித்த ஆவணப்படத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் இரண்டு மூன்று முறை ரகசியமாக நடக்கும் உணவகங்களில் பல அமைச்சர்களுடன் உணவருந்தியுள்ளதாக கூறியது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விதிகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறிய உள்துறை அமைச்சர் Gérald Darmanin, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த நபர் அமைச்சர்களுடன் தான் உணவருந்தியதாக கூறியதிலிருந்து பின்வாங்கியதாக தகவல்கள் வந்தாலும் விசாரணை தொடரும் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.