உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.
தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கினாலும் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அம்பலாங்கொட பொம்மைகள் போன்றவர்கள். அவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்ல.
நம்பிக்கை வைக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு தட்டுப்பாடே நிலவுகிறது.
தற்போது இரண்டாம் நிலை தலைமைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இல்லையேல் நாட்டின் எதிர்காலம் அழிவடைந்துவிடும் எனத் தேரர் எச்சரித்துள்ளார்.


















