குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.
சுவாசக் கருவி உபகரணங்கள் ஏற்கனவே அனைத்து இடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மது மற்றும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அண்மைய நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களால் ஒரு நாளைக்கு சுமார் 8 பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.