2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வாகன இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 15,546 என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த வாகன இறக்குமதிக்காக 1,239 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு 103 நாடுகளிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்