தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி இன்று தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகள் தொடர்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேலும் தெரிவிக்கையில்,
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி இன்று தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்புக்கான கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.
காலை முதல் மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.