நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு கவிழும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன், அரச கூட்டணி பிளவடைந்தே தீரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று தெரிவித்திருந்தார்.
இக்கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் நேற்றையதினம் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.