திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தாபெந்திவெவ பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ – அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சுத்தஹாமிகே தசநாயக்க (47வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலாலுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபருடைய வீட்டை சோதனையிட்ட போது – அவருடைய வீட்டிலிருந்து இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், துப்பாக்கியை பாவிப்பதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.