பலத்த மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு மத்திய ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


















