தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்தவர் தற்போது நம்மை விடடு பிரிந்துள்ளது பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு நடிகர், இயக்குனர், இசையமைபாளர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று யோகி பாபு கூறியுள்ளார்.
விவேக் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு: அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று பார்த்திபன் கூறியுள்ளதோடு, நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தள்ளார்.
எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என்று இயக்குனர் சேரனும், சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் என்று ரவிக்குமாரும், திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் என்று எம்.எஸ் பாஸ்கரும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்….
எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்….
திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்… pic.twitter.com/p1WFE0Ghmw— Cheran (@directorcheran) April 17, 2021
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் விவேக் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி.. உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல அற்புதமான நினைவுகள் மற்றும் தருணங்கள் எனது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் இதயம் உங்களின் குடும்பத்தினருடன் செல்கிறது.. ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரண்ட்.. என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், விவேக் சார் அதிர்ச்சியாக உள்ளது.. இந்த லெஜன்ட் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.. எம் குமரன் படத்தில் அவருடன் பணியாற்றியது பொக்கிஷமாக இருக்கும்.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில், எங்கள் விவேக் சார் இல்லை என்ற உண்மையை என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றன.. என்ன ஒரு அசாதாரண கலைஞரையும் ஒரு மனிதரையும் நாம் இழந்து விட்டோம்.. அவரது நெருங்கிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்.. என பதிவிட்டுள்ளார்.




















