இலங்கையில் பரவும் கோவிட் வைரஸ் மாறுபாடு காற்றில் பரவ கூடும் என புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளளது.
எனினும் காற்றில் பரவும் வைரஸ் ஊடாக எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம் என வைத்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் சுவாச கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என புதிய மாறுபாடு தொடர்பில் தொடர்ந்து ஆராயும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
சுவாசிக்க கூடிய எந்த பகுதி ஊடாகவும் உடலுக்குள் கோவிட் வைரஸ் பரவ கூடும் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். மக்கள் கூடும் இடங்களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.