கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பல ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்கவில்லை – முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த தரமுயர்வை விரும்பாது தடுத்து வருகின்றனர் என அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் ச.லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கல்முனை ஆதார வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த கோரி இரண்டரை தசாப்தங்களாக போராடி வருகிறோம்.
இதை அரசு விசேட கவனம் எடுத்து அமுல்படுத்த முன்வரவேண்டும் என்பதுடன் வடக்கின் ஒட்டுசுட்டான், கண்டாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு புதிய உள்ளுராட்சி சபையை உருவாக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமிக்குமாறு இந்த அரசாங்கத்தை நிறுவ எங்களின் தொழிற்சங்கம் கடுமையாக கஷ்டப்பட்டுழைத்தோம் என்ற ரீதியில்,
இந்த மேதின கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கும் இக்கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.