வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த முடிவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஏழு பேருக்கும் மன்னார், வவுனியா மாவட்டங்களியாழ்ப்பாணத்தில், திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த மூவருக்கும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைவிட, வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்கும் பூவரசம்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
மேலும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றுவந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.ல் தலா நால்வருக்கும் முல்லைத்தீவில் மூவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.