பிரபல தொகுப்பாளினி பிரியங்கா திடீர் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் தொகுப்பாளியாக வலம் வரும் பிரியங்காவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். எப்பொழுது தனது மகிழ்ச்சியான பேச்சினாலும், சிரிப்பினாலும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றால் அனைவருக்கு அலாதி பிரியம் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு கொமடி கலந்த தனது வேலையினை சிறப்பாக செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது பிரியங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இவர் சாப்பிட்ட உணவு புட் பாய்சன் ஆகியுள்ளதால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் பிரியங்காவிற்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.