காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் தஹி அவல் பழ சாட் செய்து சாப்பிடலாம். இந்த சாட் ரெசிபியை சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – அரை கப்
புளிப்பில்லாத தயிர் – ஒரு கப்
மாதுளை முத்துகள் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய ஆப்பிள் – ஒரு டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம் (வட்டமாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
வறுத்த உலர் விதை (பூசணி, வெள்ளரி விதை போன்றவை) – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
சிவப்பு அவலை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை ஒட்டப் பிழிந்துள்ளவும்.
தயிரைக் கடைந்து வாய் அகன்ற பவுலில் சேர்த்து மற்ற அனைத்துப் பொருள்களையும் அதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்’லென்றும் பரிமாறலாம்.
சிபியை சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது.