தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்தியக் கடற்றொழில் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.