உடன் அமுலக்கு வரும் வகையில் நாட்டின் ஐந்து மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.