யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
புத்தர் சிலை இருந்த அறையை உடைத்த இளைஞன் அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். எனினும், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைதான இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிகப்படுகின்றது.
இதேவேளை மதுபோதைக்கு அடிமையான இளைஞன், மது அருந்துவதற்காக இரும்புகளை சேகரித்ததாக விசாரணையில் தெரிய வந்தததாக மேலும் கூறப்பட்டுள்ளது.