நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் விவரம்.
தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்களான குஷ்பூ, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி, உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பின்னடைவில் உள்ளனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் 201 வாக்குகள் பெற்று இருக்கிறார். இதுவரை 16 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் முடிவில் மன்சூர் அலிகான் வெறும் 201 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அவரது தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சி.