இலங்கை பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் பெண் ஒருவர் மற்றுமொரு பெண்ணை நடு வீதியில் கீழே தள்ளி கொடூரமாக தாக்கும் வீடியோவில் உள்ள பெண் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை தாக்கும் போது மற்றுமொரு பெண் அதனை வீடியோவாக எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் தகவல் பெற்று அதனையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான பெண் இலங்கை பெண் எனவும் அவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
14 வருடங்களாக இஸ்ரவேலில் பணியாற்றும் அவர் 7 வருடங்களாக விசா இன்றி பணியாற்றியுள்ளார். அவர் தற்காலிகமாக வீடுகளில் பணியாற்றி வந்துள்ளார்.
பணியாற்றும் வீடுகளில் 86 வயதுடைய பெண் ஒருவருக்கு சேவை செய்துள்ளார். அங்கு தனது மாதாந்த சம்பளத்தை கேட்பதற்காக இலங்கை பெண் சென்ற போது வீட்டில் இருந்த மற்றுமொரு பெண் அவரை வீதிக்கு இழுத்து வந்து தாக்கியுள்ளார்.
எனினும் இது தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு தெரியாதென இலங்கை வெளிவிவார பணியகத்தில் பணியாற்றும் அதிகாரியான மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.