மேல் மாகாணத்தின் பூங்காக்கள், கடற் கரைகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
மேலும் தனிமைப்படுத்தல் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தே இவ்வாறு கண்காணிக்கப்பட உள்ளது.
அத்தோடு ரெஸ்டுரன்ட்கள், பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் ஏனைய பொது இடங்களில் நேற்றைய தினம் முதல் இந்த கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.