சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எரிவாயுவின் விலையை மறுசீரமைப்பது குறித்து அமைச்சரவை இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.



















