தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக களமிரங்கி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன். 7ஆம் அறிவு, 3 படங்களில் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் இருந்து நடித்து வருகிறார்.
சினிமாவில் அப்பாவை போல் சர்ச்சையில் சிக்குவதிலும் குறைவைக்காத ஸ்ருதி சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியை சந்தித்து மீண்டு வந்தார். மீண்டும் ஒருவருடன் காதலில் இருந்து வரும் ஸ்ருதி அவருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கொரானா வைரஸின் இரண்டாம் அலை என்பதால் லாக்டவுன் நேரத்தை காதலருடன் செலவழித்து வருவதாக புகைப்பட பதிவினை பதிவிட்டு வருகிறார்.




















