தமிழ் சினிமாவில் தற்போது வலம்வரும் நடிகைகளை ஓரங்கட்டி தனது நடிப்பினில் கலக்கி வருவபவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
ஆரம்பத்தில் பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்காத இவருக்கு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திருப்புமுனையாக இருந்தது. பின்பு தமிழ் தெலுங்கு என படங்களில் படுபிஸியாக நடித்து வருகின்றார்.
அதிலும் இவர் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி மற்றும் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரம் தற்போது வரை பேசப்படுவதுடன், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
நடிகை ரம்யாகிருஷ்ணன் 2003ம் ஆண்டு தெலுங்கு சினிமாவை சேர்ந்த கிருஷ்ணா வம்சி என்ற மிகப்பெரிய இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வளவு நாட்களாக ரம்யாகிருஷ்ணன் முதல் மனைவிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் காணொளி ஒன்றில் இவர் கிருஷ்ணா வம்சிக்கு இரண்டாவது மனைவி என்று புதிய அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத நிலையில் தற்போது பயில்வான் ரங்கசாமி பெரும் சர்ச்சையைக் கிளப்புதற்கு அதிகமாகவே வாய்ப்பு உள்ளது.