கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ள போதிலும் கடையில் வியாபாரம் தடையில்லாமல் நடப்பதற்காக ஷட்டரை பூட்டிவைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைக்காரருக்கு போலீசார் தக்க வகையில் பாடம் புகட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் தாத்தியா பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷட்டரை சாத்திவைத்துக்கொண்டு வியாபாரம் செய்த கடைக்காரர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக்யுள்ளார்.
திருமணத்திற்காக துணிகளை வாங்க வந்த குடும்பத்தினரை கடைக்குள் அனுமதித்த கடைக்காரர்கள் ஷட்டரை சாத்தி வைத்துக் கொண்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளனர்.
இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை திறந்து கடைக்காரரை பிடித்து இழுத்துச் செல்கிறார். ஆனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட திருமணத்திற்காக ஆடை வாங்க வந்த குடும்பத்தினர் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓடிச் செல்கின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. லாக்டவுன் என்பது கசப்பு மருந்து போன்றது.
கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்த்து அத்யாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கங்கள் கோரிக்கை வைக்கின்ற நிலையில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு கொடிய கொரோனாவை விரட்டுவதில் பொதுமக்களும் அரசுக்கு ஆதரவு தரவேண்டிய நேரமிது என வலைத்தள வாசிகள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
शादी के सीज़न में ऐसे छिप छिप कर ख़रीदारी हो रही है और पुलिस भी ऐसे लोगों को तलाश कर धुनाई कर रही है, ये विडीओ दतिया का है @Anurag_Dwary @Abhinav_Pan @ManojSharmaBpl @DGP_MP pic.twitter.com/DlfPIovICa
— Brajesh Rajput (@brajeshabpnews) May 9, 2021