செம்பனை எண்ணெய் (பாம் ஒயில்) இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதுவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இந்த தடை சம்பந்தமாக எதிர்ப்பை வெளியிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தடையானது உலக வர்த்தக அமைப்பின் இணைப்பாடுகளை மீறும் நடவடிக்கை என இருநாடுகளில் தூதுவர்கள் கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தரமான மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க இலங்கை இணங்கியதாகவும் இதனையடுத்து பிரச்சினையான நிலைமை இணக்கப்பாட்டுக்கு வந்தது எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.