நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் ஒன்று தான் மூட்டு வலி. இது ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும்.
வயதானவர்களே சந்திக்கும் பிரச்சினைகளுள் ஒன்றான இந்த மூட்டு வலி இப்போது இளைஞர்களும் சந்தித்து வருகின்றார்கள்.
இதனை ஆரம்பத்திலே கவனத்தில் கொள்வது நல்லது. அதற்கு கூடுதலாக, எலும்புகளை இயற்கையாக வலுப்படுத்த உணவுகளின் மூலம் முடியும்.
குறிப்பாக பழங்களைக் கொண்டு எலும்புகளைப் பலப்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
அந்தவகையில் எலும்புகளை வலுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உடலில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது. இதனால் கால்சியம் அதிகமாக இழக்கப்படுவது குறையும். இது தரவி, அன்னாசியில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் போன்ற எலும்புகளின் வலிமைக்குத் தேவையான இரண்டு முக்கிய சத்துக்கள் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது எலும்புகளில் சிதைவை ஏற்படுத்தக்கூடிய ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், இதில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற புதிய எலும்புகளின் உருவாக்கத்திற்கு உதவும் சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆப்பிள்களில் கால்சியம் அதிகம் இருப்பதுடன், கொலாஜென் உற்பத்திக்கு அத்தியாவசியமான மற்றும் புதிய எலும்புகளின் செயல்பாட்டைத் தூண்டும் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளன.
பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது எலும்புகள், சருமம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும்.
தக்காளியில் எலும்புகளில் உள்ள பிரச்சனையை சரிசெய்து வலிமைப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தவும் செய்கின்றன. எனவே அன்றாட உணவில் தக்காளியை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.