கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,57,299 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,02,82,833 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 34,47,133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
A patient wearing an oxygen mask is wheeled inside a COVID-19 hospital for treatment, amidst the spread of the coronavirus disease (COVID-19) in Ahmedabad, India, April 21, 2021. REUTERS/Amit Dave