தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும் தபால் சேவை தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தபால் திணைக்களத்தின் பணியாளர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தபால் மற்றும் தொலைதொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியத்தை இன்றைய தினம் தபால்மா அதிபருக்கு எடுத்துரைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.