முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்.
சிபிஐ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு விஷயங்களை வெளிக் கொண்டு வந்தார். பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பின்னர் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் ரகோத்தமன்.