கொரோனா பெருந்தொற்றானது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, திட்டமிட்டே பரவ விடப்பட்டது எனவும் சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் லு-மெங் யான் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவும் உலகை வெற்றி கொள்ளும் பொருட்டு புதுமையான உயிரியல் ஆயுதத்தை சீனா உருவாக்கியுள்ளதாக டாக்டர் லு-மெங் யான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த ரகசியங்கள் அமெரிக்காவிடம் சிக்கிய ஆவணங்களால் அம்பலமாகியுள்ளதாகவும், இது சீனாவுக்கு பின்னடைவாக மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தவே உருவாக்கப்பட்டது எனவும், சீனா திட்டமிட்டே அதை பரவ அனுமதித்தது எனவும் டாக்டர் லு-மெங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிக உயிர்ப்பலி வாங்கும் நோக்கில் கொரோனா தொற்று வடிவமைக்கப்படவில்லை எனவும், ஆனால் எதிரி நாடுகளின் சுகாதார அமைப்பை மொத்தமாக சிதைக்க வேண்டும், அதனால் சமூக அமைப்பு பாதிப்புக்கு உள்ளாக வேண்டும் என்பதே சீன நிர்வாகத்தின் திட்டம் என டாக்டர் லு-மெங் யான் தெரிவித்துள்ளார்.
இதையே, வூஹான் நகரில் அவர்கள் சோதனை முயற்சியாக முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளனர் எனவும், வூஹான் நகரம் மொத்தமாக ஒடுங்கிப்போனது என்றார்.
5 முதல் 6 ஆண்டுகள் கணக்கில்லாத தொகை செலவிட்டு உருவாக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ராணுவ விஞ்ஞானிகளுக்கு பங்கிருப்பது தம்மால் நிரூபிக்க முடியும் எனவும், அதை சீனாவால் மறுக்க முடியாது எனவும் டாக்டர் லு-மெங் யான் தெரிவித்துள்ளார்.