நாடு முழுவதும் இன்று முதல் வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவரும் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். உணவகங்கள் மற்றும் பிற வணிகநிலையங்கள் இரவு 10 மணிக்கு முன்னர் மூடப்பட வேண்டும், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வீட்டிற்குச் செல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது ஒருவகையில் ஊரடங்கு உத்தரவைப் போன்றது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.