டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.
ஏற்கனவே நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்து கலக்கியவர், தற்போது தற்போது என்4 என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சிலநாட்களுக்கு முன்னர் கூட ஏஆர் ரஹ்மானின் இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருந்தார், அவருடன் எடுத்த செல்பியும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் கேப்ரியல்லாவுக்கு, கொரோனா தொற்று உறுதியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார், இதுகுறித்து அவரே இன்ஸ்டாவில் பதிவிடவும் செய்தார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கேப்ரியல்லா, உயிருக்கு போராடி வருவதாகவும், சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாகவும் வீடியோ ஒன்று வெளியானது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கேப்ரியல்லா, தான் நலமாக இருப்பதாகவும், உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram