நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது அவர் கூறியுள்ளார்.
குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று இரவு முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தப் பயணத் தடையானது இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.