இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (13) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணின் அடிப்படையிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும்.
இது தொடர்பான தகவல்களை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் 0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோரானா வைரஸ் பரவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாட்டை முடக்க நிலைக்கு கொண்டு செல்லாது பயண கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.