இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென தொற்று நோய் விஞ்ஞான பிரிவின்ன பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் கோவிட் தொற்றுக்குள்ளான பாரிய அளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் மரபணுவே பரவி வருகின்றது. அதன் பரவல் வேகம் மிகவும் அதிகம் என்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருக்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.