தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் தான் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை கூறியிருக்கிறார்.

‘உன்னை தேடி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜா வனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘பேரழகன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ மற்றும் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் “வாழ மீனுக்கு” என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


















