தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இந்திய சினிமா வரை ஜொலித்து பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்தவகையில், கன்னட நடிகையாக கில்லி படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கில் கெராடம், தமிழில் யுவன் போன்ற படங்களில் அறிமுக நடிகையாக நடித்தார்.
இதையடுத்து தடையர தாக்க ஆரம்பித்து தமிழ் , தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து பிஸியாக நடமாடினார். தற்போது இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் அயலான், இந்தியன் டூ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்து மராத்தி இயக்குநர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் காமெடி கலந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
அதிலும் முக்கிய கதாபாத்திரமாக ரகுல் ப்ரீத் சிங்தான் இருப்பாராம். காண்டம் பரிசோதனை செய்பவராக லீட் ரோல் தான் அது. அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குநர் நடிஅகி அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரை பேசி அணுகியிருக்கிறார்கள்.
ஆனால் இருவரும் சம்பதிக்காமல் இருந்ததால் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை கமிட்டாக்கி சம்பளத்தையும் பேசியுள்ளார்களாம்.




















