காலா படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரின் வாழ்க்கை கரியெரை மாற்றியது. க்யூட்டான தமிழ் பேச்சால் அனைவரையும் கவர்ந்து 50 நாட்களுக்கும் மேலான பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி க்ளாமரில் உச்சம் தொட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் சேலை கட்டியபடி க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டார்.
சில கருத்துக்களையும் தான் பட்ட கஷ்டத்தை பற்றியும் புகைப்படத்திற்கு கீழே பதிவிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சாக்ஷி. சிறு வயதில் பள்ளி படிக்கும் போது தோழிகள் சிலர் என்னை பார்த்து நீ குண்டாகவும் அசிங்கமாகவும் இருக்கிறார், உன்னை யாருக்கும் பிடிக்காது என்று கூறினர். எந்த பையனும் உன்னை விரும்ப மாட்டேன் என்றும் கூறி கஷ்டப்படுத்தினர்.
ஆனால், தற்போது என்னை பிடித்து இருப்பதாக பலரின் கடிதங்கள் மூலம் தெரிகிறது. அழகை வைத்து வித்தியாசப்படுத்தி யாரையும் இழிவு படுத்தாதீர்கள் என்றும் பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் யாராக இருந்தாலும் குறைவாக பதிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது அதற்கு மாறாக நடிகை சாக்ஷி அகர்வால் சிக்ஸ்பேக்குடன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.



















