விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், கீக்பென்ச் தகவல்களின்படி புதிய விவோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டிமென்சிட்டி 1100 மற்றும் டிமென்சிட்டி 1200 போன்ற பிராசஸர்களுக்கு இணையான ஒன்றாகும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கீக்பென்ச் சோதனையில், இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 3467 புள்ளிகளையும், மல்டி கோரில் 8852 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ்70 மாடலின் ரி-பிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஐகூ பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.