ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போனினை மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையில் ஹை பிடிலிட்டி வசதியை அறிவிக்கும் என கூறப்படுகிறது. புது சாதனங்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என தெரிகிறது.
ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சேவையில் புதிதாக ஹை பிடிலிட்டி வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் ஹைபை சேவைக்கான கட்டணம் 9.99 டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் அதற்கேற்ற ஹார்டுவேர் கொண்ட சாதனங்களில் மட்டுமே இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.