இஸ்ரேலில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்திற்கும் பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் குழுமும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் தங்களது பயண ஆவணங்களை எப்போதும் சுலபமாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
மிகவும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளின் போது அழைப்பினை மேற்கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.
058 6875764 மற்றும் 055 9284399 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



















