ஷிவாங்கி மற்றும் அஸ்வின் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ரசிகர்கள் பொறாமை கொள்ளும்படியாக அமைந்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதினை வென்றதோடு, ஷிவாங்கியின் குறும்புத்தனம் வேற லெவல் என்றே கூறலாம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் பலரும் ரசித்து வருகின்றனர். காரணம் சீரியல்களில் அழுகை சீன்களை பார்த்து பார்த்து போரடித்துப் போய் இருந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் ஜாலியாகவும் பார்ப்பவர்கள் மனக்கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் கலகலப்பான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
இளைஞர்களின் மனதில் கலக்கல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வின் சிவாங்கி பலருக்கும் பிடித்திருக்கிறது.
தற்போது சினிமாக்களிலும் காலடி எடுத்து வைத்தாலும் தான் வந்து பாப்புலரான இந்த நிகழ்ச்சியை எந்த நிலையிலும் மறக்கவே மாட்டேன் என கூறியிருக்கிறார். அதுபோலதான் சிவாங்கியும் இதற்கு முன்னர் இவர் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு பாதியிலே வெளிவந்திருந்தாலும் இவருக்கு இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு கொடுத்து இருக்கிறது.
சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர்கள், தற்போது இந்த ஊரடங்கு நேரத்தில் இவருக்கு நேரம் போகாமல் இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ்விலும் தன்னுடைய ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிலர் ரீல் ஜோடியாக இருக்கும் நீங்கள் எப்போது ரியல் ஜோடியாக மாறுவீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு புன்னகையை மட்டுமே இருவரும் பதிலாக வழங்கி வருகின்றனர்.




















